Dear Students.

வணக்கம் மாணவர்களே! பௌதிகவியல் அறிவினை மேம்படுத்த உங்களுக்கான ஒரு இணையம் இது...

செவ்வாய், பிப்ரவரி 19, 2013

மின்காந்த அலைகள்


பொதுவாக மின்காந்த கதிர்வீச்சு அதன் அலைநீளத்திற்கு ஏற்ப வானொலி, நுண்ணலை, கீழ்சென்நிறக்கதிர், புற ஊதா, கட்புல ஒளி, எக்ஸ்-கதிர் மற்றும் கமா கதிர் என வகைப்படுத்தப்படுகிறது.
மின்காந்த கதிர்வீச்சின் நடத்தை அதன் அலைநீளத்தை சார்ந்து அமையும். உயர் அதிர்வெண்களில் குறுகிய அலைநீளத்தையும், தாழ் அதிர்வெண்ணில் நீண்ட அலைநீளத்தையும் கொண்டிருக்கின்றன. மின்காந்த கதிர்வீச்சு தனிஅணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுடன் இடைவினையின் போது, அதன் நடத்தை ஒவ்வொரு குவாண்டமும் காவுகின்ற ஆற்றலின் அளவை பொறுத்தது.

1845-இல் மைக்கேல் ஃபாரடே என்பார், நேரியல் முனையமைவுறுபெற்ற ஒளியின் முனையமைவுறு தளமானது, ஒளியானது காந்தப் புலத்தின் திசையில் ஒரு மின்கடத்தாப் பொருளின் ஊடாக செல்லும்போது சுழற்றப்படுகிறது எனக் கண்டறிந்தார்; இவ்விளைவு ஃபாரடே சுழற்சி என்றழைக்கப்படுகிறது. இவ்விளைவே ஒளிக்கும் மின்காந்தவியலுக்கும் தொடர்புள்ளது எனத் தெரிவித்த முதல் நிகழ்வாகும். 1846-இல் ஃபாரடே, ஒளியானது காந்தப்புல வரிகளினூடாக பரவும் இடையூறுகளாக இருக்கலாம் என ஐயமுற்றார். ஒளியானது அதிக அதிர்வெண் கொண்ட மின்காந்த அதிர்வாகும், அவை ஈதர் போன்ற ஊடகம் ஏதுமின்றியும் பயணிக்கும் என்று 1847-இல் ஃபாரடே தன் கோட்பாட்டை வெளியிட்டார்.

Reference : http://ta.wikipedia.org